பீஜிங்:
சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில், தங்களை காப்பாற்ற மத்திய அரசு முயல வேண்டும் என வுகான் மாகாணத்தில் உள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். இதுபற்றி, கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: எங்கள் பல்கலைக்கழகத்தில் என்னுடன் சேர்த்து தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இருக்கிறார்கள். எங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கு நாங்கள்தான் வெளியே செல்ல வேண்டியதாக இருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை வெளியே சென்று காய்கறி வாங்க வேண்டிய நிலை உள்ளது. அரசியல் செய்திகள்
Read more at: https://tamil.oneindia.com/news/international/corona-virus-tamil-students-studying-in-china-wants-help-375387.html
No comments:
Post a Comment